விவேக் வீட்டிற்கு சென்று தளபதி விஜய் அஞ்சலி செலுத்திய நிலையில் இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Vijay Pay Respects to Vivek : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். இவர் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தளபதி விஜய் தல அஜித் உள்ளிட்டோர் ஊரில் இல்லாததால் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தளபதி விஜய் ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த புதிய படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இது விஜய் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது ஒருபுறமிருக்க அவர் கொரானா விதிமுறைகளை பின்பற்றாமல் ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்த நாளே விவேக் வீட்டிற்கு சென்றது கொரோனா விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி வருகின்றனர். பத்து நாட்கள் தனிமையில் இருந்து விட்டு விவேக் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என கூறி வருகின்றனர்.