விடாமுயற்சி படத்தில் பிரபல விஜய் பட நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டு டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தனது 62வது திரைப்படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பினை படக்குழு ஏற்கனவே அருவித்திறந்ததை தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இதில் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கும் மற்ற நட்சத்திரங்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சில நாட்களாக இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா தான் நடிப்பார் என்ற தகவல் ஒன்று பரவி வரும் நிலையில் இதில் அஜித்திற்கு முக்கிய வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பினை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.