விவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் சபதம் ஒன்றை எடுத்துள்ளனர்.
Vijay Makkal Iyakkam For Vivekh Dream : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விவேக். காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் சமூக ஆர்வலராகவும் வலம் வந்தார். அப்துல் கலாம் அவர்களின் கனவான பசுமை இந்தியா என்பதை நனவாக்க தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
நேற்று முன்தினம் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவருடைய கனவை நனவாக்க மாறிவிடுமோ என பலரும் கவலைப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் விவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம் எனக்கூறி ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காட்டுவோம் என கூறியுள்ளனர்.
முதல்படியாக அவர்கள் மரக்கன்றுகளையும் நட்டு உள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் இவரின் இந்த முடிவை பலரையும் பாராட்ட வைத்துள்ளது.