வாரிசு படத்தின் படப்பிடிப்புக்காக விமான நிலையத்திற்கு சென்ற விஜய்யின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

மக்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்படும் தளபதி விஜய் ‘பீஸ்ட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தீவிரமாக நடித்து வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தை இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்க தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், நடிகர் சாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் வம்சி தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கி வருகிறார். அதற்கான படப்பிடிப்பு பணிகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட வேண்டிய படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற இருக்கிறது.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, விஜயை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.