
தளபதி விஜய் கமல்ஹாசன் கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கமல்ஹாசனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஜாம்புவானான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி கடந்த ஒரு வருட காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சேலத்தில் மக்கள் முன்பு நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது குறித்து பேசியுள்ளார்.
விஜய்க்கு எங்களுடைய கட்சியில் எப்போதும் இடமுண்டு. அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.
