ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் அடுத்து என்ன செய்தார் என்பது குறித்து தகவலை அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Vijay in Rolls Car Tax Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இது ஒருபுறமிருக்க பிரிட்டன் நாட்டில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் விஜய் இறக்குமதி செய்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தளபதி விஜய் நுழைவு வரியை கட்டாயம் கட்ட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. தனி நீதிபதி தன் மீது வைத்த விமர்சனங்கள் மற்றும் நீக்குமாறு விஜய் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும் தனக்கு நுழைவு வரி கட்டுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அந்த வகையில் தற்போது அவர் ரூபாய் 40 லட்சம் நுழைவு வரி செலுத்தி விட்டதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்! | Vikram Movie