தளபதி-69 படத்தின் ஃபர்ஸ்ட் அன்ட் செகன்ட் லுக் இன்று வெளியீடு

குடியரசு தினமான இன்று ‘தளபதி-69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அன்ட் செகன்ட் லுக் வெளியாகி உள்ளது. இது பற்றிப் பார்ப்போம்..
‘தளபதி-69’ திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், குடியரசு தினமான இன்று ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், தன் பின்னால் மக்கள் படை திரண்டிருக்க, விஜய்யுடன் உற்சாகம் பொங்க செல்பி எடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படக்கதையை விஜய்க்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறது எனவும் வதந்திகள் பரவின. ஆனால், அதுபற்றி எந்த வித தகவலையும் வெளியிடாமல் படக்குழு சீக்ரெட்டாக வைத்திருக்கிறது.
தற்போது, இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில் செம மாஸ் லுக்கில் காட்சியளிக்கிறார் விஜய். கையில் சாட்டையை சுழற்றியபடி விஜய் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்தில் ‘நான் ஆணையிட்டால்’ என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
