Vijay Fans Warning to Seeman

இது எச்சரிக்கை அல்ல கட்டளை என சீமானுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் தங்களுக்கு கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Vijay Fans Warning to Seeman : தமிழகத்தில் 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் அனைத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என நடிகர்கள் பலரும் புதிய கட்சி மூலம் அரசியலில் குதித்துள்ளனர்.

இந்தநிலையில் சீமான் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி கமல் அடிக்கிற அடியில விஜய் உட்பட எந்த நடிகனுக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏற்படக்கூடாது என பேசினார்.

சீமானின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது எச்சரிக்கை இல்லை கட்டளை எனவும் வார்னிங் கொடுத்துள்ளனர்.

இதே சீமான் தான் சில வருடங்களுக்கு முன்னர் யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள் விஜய் வந்தால் நிச்சயம் வரவேற்பேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.