தமிழ் சினிமாவில் காமெடிகள் நாயகன் என்றால் அது வைகை புயல் வடிவேலு தான். இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களின் குரு என்றால் அது வடிவேலு தான்.

அவருடைய அத்தனை முக பாவனைகளும் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிக பெரிய பலமாக இருந்து இருந்து வருகிறது.

மேலும் வடிவேலு இணைந்து நடிக்காத மெகா ஸ்டார்களே தமிழ் சினிமாவில் இல்லை என்ற கூறலாம். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் வடிவேலு அவர்களுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த சமயத்தில் தளபதி ரசிகர்கள் விஜயும் வடிவேலும் இணைந்து நடித்துள்ள படங்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.