குடிபோதையில் டயலாக்கை உளறி கொட்டியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக விஜய் தேவர்கொண்ட பேட்டியில் வருத்தப்பட்டுள்ளார்.

முன்னணி தெலுங்கு ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருந்த விஜய் தேவர் கொண்டா. ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் ‘நோட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் தற்போது ‘லிகர்’ திரைப்படம் உருவாகி திரைக்கு வர தயாராகியுள்ளது.

மேலும் தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் தற்போது நடித்தும் வருகிறார். இந்நிலையில் தன்னை பற்றின விஷயங்களை எப்போதும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் விஜய் தேவர் கொண்ட தற்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தனது குடிப்பழக்கத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் “எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்து விட்டு வந்தேன். அடுத்த நாள் காலையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் போதை குறையாமலேயே எழுந்து படப்பிடிப்புக்கு சென்றேன். ஆனால் அப்போது படத்தின் கதாபாத்திரத்துக்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிமாகிவிட்டது. வசனம் சொல்ல மறந்து உளற ஆரம்பித்தேன். பைத்தியக்காரன்போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர்” என்று மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.