தளபதி விஜய் அவர்களின் மகளான திவ்யா சாஷா தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே அதிர வைத்து வருகிறது.

தமிழ் திரை உலகில் இளைய தளபதியாக பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கி கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக விசாகப்பட்டினத்திற்கு சென்றிருக்கும் விஜய் தற்போது அவரது காட்சிகளின் படமாக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் தற்போது சென்னைக்கு திரும்பி உள்ளார். இவரது வாரிசு படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் வகையில் தற்போது விஜய் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய்யின் இளைய மகளான திவ்யா சாஷா ஏற்கனவே விஜயின் தெறி திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்களில் மட்டும் விஜயுடன் இணைந்து நடித்திருப்பார். அதில் சிறிய பெண்ணாக இருந்த திவ்ய சாஷா தற்போது வளர்ந்து ஹீரோயின் போல் அப்புகைப்படத்தில் இருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது விஜயின் மகள் திவ்ய சாஷா தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் அவரைப் பார்க்கும்போது சினிமா ஹீரோயின் போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது மட்டுமின்றி அனைவருக்கும் ஷேர் செய்து வருகின்றனர்.