தளபதி விஜய் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தனது வேண்டுகோளை புது இயக்குனர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களில் இளைய தளபதியாக திகழ்பவர்தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க சரத்குமார், சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அப்பேட்டியில் நடிகர் விஜய் புதிய இயக்குனர்களிடம் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். அதாவது அவர் கூறியது, இன்னிக்கு இருக்கிற புதிய இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் அவர்களுடைய எல்லா படங்களையும் நான் பார்க்கிறேன் இன்க்ளூடிங் நெல்சன், அவங்க இயக்குற எல்லா படங்களும் புதுப்புது ஐடியாஸ்சோட நல்ல நல்ல படங்கள் பண்றாங்க, ஆனா என்ன ஒரு வேண்டுகோள்னா 2:30 மணி நேரத்துக்குள்ள உங்க கதையை சொல்லி முடிச்சிருங்க.

அதுக்கு மேல போச்சுன்னா படம் நல்லாவே இருந்தாலும் ஆடியன்ஸ் படத்தை பாக்குறதுக்கு பதிலா வாட்ச் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க, அவங்களுக்கு பொழுதுபோக்கு என்பதை மறந்துவிட்டு ஐயோ டைம் ஆயிட்டு இருக்கே என்ற ஃபீலிங் வந்துரும். ரொம்ப நேரம் படம் எடுத்த பாம்பு கூட கீரி கிட்ட தோத்துப் போயிடும் அதனால அதை மனசுல வச்சிக்கிட்டு படம் எடுங்க என்று சிறப்பாக பேசியிருக்கிறார். இந்த அசத்தலான பேட்டி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.