விஜய் ஆண்டனியின் புதிய படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாக நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான நான், பிச்சைக்காரன், அண்ணாதுரை என்று வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது கோலி சோடா என்ற படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.இன்ஃபினிட்டி ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க அச்சு ராஜாமணி பின்னணி இசையமைத்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து இப்படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு அதையடுத்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்பதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு வைரல் ஆகி வருகின்றனர்.