vijay and pooja hegde starrer thalapathy-69 shooting starts with song sequence from today at payyanur in kerala
vijay and pooja hegde starrer thalapathy-69 shooting starts with song sequence from today at payyanur in kerala

சினிமாவும் அரசியலும் இரட்டைக் குழந்தைகள் போல இருந்தாலும், குணாதிசங்கள் வேறு; அணுகுமுறைகள் வேறு. சினிமாவிலிருந்து அரசியல், அப்புறம் ஆட்சியென அமைந்த வரலாறெல்லாம் நாடு அறியும். யாரை எங்கே வைப்பது என இறுதியாக தீர்மானிப்பது ஜனநாயகம் தானே.!

இத்தகைய பரபரப்பான தமிழக வரலாற்று சூழலில், தளபதி-69 படத்தின் பூஜையானது நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது தெரிந்ததே.

எப்போது பூஜை போடப்பட்டு ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டதோ, அப்போதே படம் குறித்து ஒவ்வொரு தகவலும் வலைதளங்களில் கசியத் தொடங்கியது. விஜய்யின் கடைசி படமாக உருவாகும் தளபதி 69 படமானது, முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்னதாக தளபதி 69 படம் வெளியாகும் என்பதால், இந்தப் படத்தின் கதை, காட்சிகள், வசனங்கள் எல்லாம் அரசியலை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கட்சி கொடியும் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து இயக்குனர் வினோத் எதுவும் குறிப்பிடவில்லை.

படம், அரசியல்-ஆக்‌ஷன்- த்ரில்லர் கலந்த கலவையாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னையில். படத்தின் பூஜை நடந்ததைத் தொடர்ந்து, இன்று முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

அதிகப்படியான ரசிகர்களை கொண்ட கேரளாவின் பையனூர் பகுதியில் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதல்கட்ட படப்பிடிப்பில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தொடர்பான பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

அதோடு இந்தப் பாடலுக்கு, சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துக் கொடுக்கிறார். பாடலானது ‘ அடி ரஞ்சிதமே..’ பாடலை விடவும் பல மடங்கு தெறிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனிருத் கலக்கியிருக்கிறார். இதற்காக பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்திற்கு அரசியல் தொடர்பான ஒரு டைட்டில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, தலைவா, சர்கார் படங்களைப் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜனநாயகம் என்று கூட டைட்டில் இருக்கும் என்று தகவல் பரவி வருகிறது.

ஏனென்றால், விஜய்யின் தளபதி 69 பட போஸ்டரில் ஜனநாயகத்தை காக்க கையில் தீப்பந்தம் ஏந்தி இருப்பது போன்று ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. ஆதலால், இது அரசியல் படம் தான் என்று சொல்லப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான அரசியல் பயணமாக தளபதி 69 படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அப்டியா.. அப்ப, காதலுக்கு மரியாதை-2 இல்லையா.! ஹி..ஹி..