விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

Web Ads

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும், ரிலீஸில் எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகின்றது. மேலும், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்க போட்டி நிலவி வருகின்றது. ஒருபக்கம் லலித், ஏ.ஜி.எஸ் மறுபக்கம் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என ‘ஜனநாயகன்’ ரைட்ஸை வாங்க பலர் போட்டி போட்டனர். இதில் லலித் மற்றும் ராகுல் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு ‘ஜனநாயகன்’ திரையரங்க உரிமை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், ரோமியோ பிக்சர்ஸ் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் நெருக்கமாக இருக்கின்றார் என்ற தகவல் பரவ விஜய் இதற்கு ஓகே சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்தது.

விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதால் இதையெல்லாம் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாக பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. இதனால் விஜய், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு ‘ஜனநாயகன்’ திரையரங்க உரிமையை கொடுக்கலாமா ? வேண்டாமா? என்ற நிலையில் இருந்தார். அப்போது, இயக்குனர் ஹெச்.வினோத் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹெச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கிய மூன்று படங்களையும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கி வெளியிட்டு இருக்கின்றார். இதனால் ஹெச்.வினோத்திற்கும் ராகுலுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

எனவே, விஜய்யிடம் ஹெச்.வினோத் படத்தின் திரையரங்க உரிமையை ராகுலுக்கே கொடுக்கலாம் என கோரிக்கை வைக்க, விஜய்யும் இதற்கு ஓகே சொல்லியிருக்கின்றார்.மேலும் ராகுலுக்கு ஜனநாயகன் திரைப்படத்தை கொடுப்பதால் ரிலீஸில் எந்த பிரச்சினையும் இருக்காது, சுமூகமாக படம் வெளியாகும் என நம்பிக்கையுடன் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் பெரும்பாலான பணிகளை ஹெச்.வினோத் முடித்துவிட்டார். விஜய் மட்டும் டப்பிங் பேசவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும், அடுத்த மாதம் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருப்பதாகவும், அதன் பிறகு படத்தின் ப்ரோமோஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

vijay a jananayagan movie theatrical rights
vijay a jananayagan movie theatrical rights