Thalapathy 63

Vijay 63 Story Issue : அட்லீயின் தளபதி 63 படத்தின் கதையும் காப்பி தான் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. இவர் தற்போது தளபதி விஜயை வைத்து மூன்றாவது முறையாக படத்தை இயக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருந்தன.

இந்நிலையில் தற்போது குறும்பட இயக்குனர் ஒருவர் அட்லீயை சந்தித்து நீங்கான் இயக்க இருப்பதாக கூறப்படும் கதை என்னுடைய குறும்படத்தை போலவே இருப்பதாக கேள்விப்பட்டேன் என கூறியுள்ளார்.

அதன் பின்னர் அட்லீ அந்த குறும்பட இயக்குனரின் கதையை கேட்டு விட்டு இதையெல்லாம் பெரியதாக்காதீர்கள். நானே உங்களுக்கு பட வாய்ப்பை வாங்கி தருகிறேன் என கூறி அனுப்பி வைப்பதாக அந்த தகவல் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இதனால் நெட்டிசன்கள் பலரும் அப்போ தளபதி 63 படத்தின் கதையும் சுட்ட கதை தானா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விமர்சனங்களால் தளபதி ரசிகர்கள் அட்லீ புள்ளையார் சுழி போட்டால் கூட அது என்னோடதுனு வருவாங்க போலவே என பதிலுக்கு அவர்களும் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.