Vijay 63 Movie Tickets

Vijay 63 Movie Tickets : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள இந்த படத்திற்கு 1 வருடம் முன்பே 2000 டிக்கெட் கேட்டு ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தளபதி விஜய் தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியாகி இருந்தது.

படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரூபன் எடிட்டிங் பணிகளை செய்யவுள்ளார்.

பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுத உள்ளார் போன்ற தகவல்கள் நேற்று வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் எனக்கு அடுத்த தீபாவளிக்கு விஜய் படத்திற்காக 2000 டிக்கெட்கள் வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.

ட்வீட் செய்த இந்த நபர் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் உரிமையாளரின் நண்பரின் என்பதால் அவர் இந்த டீவீட்டை தன்னுடைய பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.