விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருந்தார்.

ஆனால் சில பல காரணங்களால் படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது twitter பையோவில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படங்கள் குறித்து சில தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கோமாளி, லவ் டுடே போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சுவாரசியமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.