முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. ஏழு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிய இவர்கள் அக்குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்ற பெயரை வைத்து உயிர் & உலகம் என்று அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.