நயன்தாரா குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாராவின் போஸ்டரை படகுழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அப்போஸ்டர் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வரும் நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தங்கமே நயன்தாரா உன்னை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இவ்வளவு பெரிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாய். உனது பயணம் இப்போதுதான் தொடங்குகிறது. எனது அன்பான மனைவியே உன்னை நினைத்து நம் குடும்பம் பெருமைப்படுகிறது” என தெரிவித்திருக்கிறார். இவரது இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.