இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவின் மூலம் தங்களை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக காதலித்து வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணம் செய்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் இருவரும் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ளனர். இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரவபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதமான நிலையில் அதற்குள் குழந்தை பிறந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

விமர்சனம் செய்தவர்களுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பதிலடி!!!… வெளியான அதிரடி பதிவு!.

இதனால் பல சர்ச்சைகள் எழுந்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கான விளக்கத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சில நெட்டிசன்கள் இன்னும் சில விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

விமர்சனம் செய்தவர்களுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பதிலடி!!!… வெளியான அதிரடி பதிவு!.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நள்ளிரவில் இன்ஸ்டா பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களுடன் இருப்பார்கள். அவர்களே உங்கள் நலம் விரும்பிகள் பாசிட்டிவிட்டி”. என்று குறிப்பிட்டு இருக்கிறார். நயன்-விக்கி இருவரையும் பலரும் விமர்சித்து வரும் நிலையில் இவரது இந்த பதிவு அவர்களுக்கு அளித்த பதிலடியாக பார்க்கப்படுகிறது.

விமர்சனம் செய்தவர்களுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பதிலடி!!!… வெளியான அதிரடி பதிவு!.