அஜித் கைவிட்டதும் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் முன்னணி நடிகரு ஒருவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் விக்னேஷ் சிவன் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு படம் ஒன்றை கொடுத்துள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.

ஆமாம், நடிகர் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.