இதெல்லாம் நடந்தால் தான் எங்களுக்கு திருமணம் நடக்கும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Vignesh Shivan About Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த ராக்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Trailer-யே ரொம்ப interesting-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Talk | VishalVenkat

சென்னையில் 11,229 தெருக்களில் கொரோனா : சுகாதாரத்துறை நடவடிக்கை

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது உங்களுக்கும் நயன்தாராவுக்கும் எப்போது திருமணம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விக்னேஷ் சிவன் எங்கள் இருவருக்கும் வெவ்வேறான குறிக்கோள்கள் உள்ளன. அவை முதலில் நிறைவேற வேண்டும். மேலும் சினிமா பிரபலங்களின் திருமணம் என்றால் நிறைய செலவாகும். கொரோனா படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்பியதும் அதற்காக சம்பாதித்து விட்டு திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.