ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிய பின்னரும் அஜித் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி படத்தை இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன் நீக்கம் குறித்து அறிவிக்கவில்லை என்றாலும் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பயோவில் இருந்து ஏகே 62 என்பதை நீக்கி இருந்தார்.

இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அஜித் அழகாக சிரிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். ஹார்ட்டின் சிம்பிளை அள்ளி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் மீது இவ்வளவு பாசமா? தல கண்டிப்பாக விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.