தெலுங்கில் வெளியாக இருக்கும் விடுதலை திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் படக்குழு கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் திரைப்படம் விடுதலை. இதில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இளையராஜா இசையமைப்பில் உருவான இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் தெலுங்கில், ‘விடுதலா’ என்ற பெயரில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தினை தெலுங்கு நடிகர் அள்ளு அர்ஜுனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வெளியிட இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை ட்ரெய்லருடன் படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில் விடுதலை திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் தெலுங்கு பிரஸ் மீட்டில் கலந்து கொண்டுள்ள படக்குழுவின் மகிழ்ச்சியான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.