viduthalai 2 movie update
viduthalai 2 movie update

விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றதால் இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தற்போது வெற்றிமாறன் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ள நிலையில் முதலில் 20 நாட்கள் சூட்டிங் மட்டும் போதும் என சொல்லி இருந்தார். ஆனால் கிட்டத்தட்ட தற்போது 50 நாட்கள் சூட்டிங் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக படத்தின் சூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து முடிந்து இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாவது என்பது சந்தேகம் தான் என தெரிய வந்துள்ளது. இதனால் விடுதலை 2 படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடுத்த வருட ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த படம் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.