சாமி தரிசனத்திற்காக கோயில் சென்றுள்ள ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சூழ்ந்து விட்டது இந்த பரபரப்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video of Rashmika Mandana getting caught in a crowd of fans has gone viral:

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிரபல தெலுங்கு நடிகையான இவர் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து புஷ்பா திரைப்படத்தின் மூலம் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த ராஷ்மிகா மந்தனா!!… வெளியான வைரல் வீடியோ.

தற்போது தமிழில் இளைய தளபதி விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடிக்கும் அவர், பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். ரன்பீர் கபூருடன் அனிமல், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இது போக அமித்தாப்பச்சனுடன் ராஷ்மிகா நடித்திருக்கும் குட்பை திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், மும்பையில் இருக்கும் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ள ராஷ்மிகா மந்தனாவை காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த ராஷ்மிகா மந்தனா!!… வெளியான வைரல் வீடியோ.

ஒரு கட்டத்தில் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கவே, பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ராஷ்மிகாவுக்கு மிகவும் சிரமமான நிலை உருவானது, சிலர் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் பத்திரமாக அவரை காருக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு காரில் ஏரியா ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் கைவசைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna gets MOBBED as she visits Mumbai’s Lalbaughcha Raja with Ekta Kapoor