நடிகர் ரஜினிகாந்த் தெருவில் ஸ்டைலாக வாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170 ஆவது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் “தலைவர் 170” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பிசியான நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தெருவில் ஸ்டைலாக வாக்கிங் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது, நடிகர் ரஜினிகாந்திடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரது ஸ்டைலான நடையும் அவரது எனர்ஜிடிக்கும் தான் அதனை யாராலும் ஈடு கொடுக்க முடியாது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தெருவில் அதே வேகம் மற்றும் எனர்ஜிக்குடன் ஸ்டைலாக வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் வியப்போடு தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.