அஜித்துக்கு வில்லனாக நடிக்க போவது யார் ஷூட்டிங் தொடங்கப் போவது எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் தமன்னா நடிக்க போவதாக தகவல் வெளியானது.

மேலும் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பெரும்பாலான காட்சிகளை துபாயில் படமாக்க இருப்பதாகவும் மேலும் சில காட்சிகளை சென்னை, ஹைதராபாத்தில் படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விருந்தாக இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.