ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் விடாமுயற்சி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

vidamuyarchi movie pre booking update
vidamuyarchi movie pre booking update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,அர்ஜூன், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இந்த படம் ப்ரீ புக்கிங்கில் 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

vidamuyarchi movie pre booking update
vidamuyarchi movie pre booking update