விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அவரது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படம் தொடர்பான அப்டேட்கள் அதன் பிறகு எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது படம் உருவாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் அந்த அப்டேடிருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.