விடாமுயற்சி திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகமடைய செய்து வைரலாகி வருகிறது.