இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது குறித்து பகிர்ந்து இருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் வெற்றிமாறன். இவர் விடுதலை திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை மும்பரமாக இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கம் இருக்கும் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், நடிகர் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்கேற்றபடி அவரும் எனது படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்த பிறகு விஜயுடன் நிச்சயம் இணைவேன். ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் நான் சொல்லும் கதை அவருக்கும் பிடிக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.