விடுதலை படக்குழுவினருக்கு இயக்குனர் வெற்றிமாறன் தங்க காசுகளை பரிசளித்து மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

Vetrimaran surprise to Viduthalai movie team:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் நேற்றைய முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கி மகிழ்வித்து இருக்கிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இப்படத்தில் பணியாற்றிய 25 உதவி இயக்குனர்களுக்கு செங்கல்பட்டு அருகே ஒரு கிரவுண்ட் நிலம் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு தங்க காசுகளை பரிசளித்து மகிழ்வித்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.