Vetrimaaran direct Vijay
Vetrimaaran direct Vijay

Vetrimaaran direct Vijay – வெற்றி மாறன் அல்லது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் தளபதி விஜயை நடிக்க வைக்க ஆசைப்படுவதாக எழுத்தாளர் சுசித்ரா ராவ் கூறியுள்ளார்.

கால்நடை கடத்தல் குறித்து தி ஹைவே மாஃபியா என்ற பெயரில் புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருந்தார்.

அரசியல் கலந்த த்ரில்லர் கதை என்பதால் இந்த கதையை படமாக்க ஆசைப்படுவதாகவும் அப்படி இந்த படத்தை எடுத்தால் அதில் விஜய் தான் ஹீரோ எனவும் கூறியுள்ளார்.

அதே போல் தெலுங்குவில் மகேஷ் பாபுவும் கன்னடத்தில் யாஸும் தான் பொருத்தமாக இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

தமிழில் விஜயை தவிர வேறு யாரும் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் எனவும் மேலும் தமிழில் இந்த படத்தை வெற்றி மாறன் அல்லது பி.எஸ் மித்ரன் இயக்கினால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்த்துள்ளார்.