கஸ்டடி திரைப்படம் குறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருக்கும் தவறான பதிவிற்கு வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் “கஸ்டடி”. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்க கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

மேலும் இதில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ள இப்படம் மே 12 ஆம் தேதியான நாளை திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் கஸ்டடி திரைப்படம் மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று நெட்டிசன் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதனை கண்ட வெங்கட் பிரபு அதற்கு, இது உண்மை இல்லை ப்ரோ, நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள். நாளை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். கண்டிப்பாக கஸ்டடி திரைப்படத்தை பாருங்கள். பார்த்த பிறகு எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று ரீட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார். இவர்களது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.