கெட்ட வார்த்தையில் திட்டி அப்டேட் கேட்ட விஜய் ரசிகருக்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெங்கட் பிரபு கடந்து வாரம் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் கோட் படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எங்கே என கேட்டதோடு வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு அப்டேட் கொடுக்கலாம் என்று தான் நினைச்சேன், ஆனால் இப்போ எப்படி நீங்களே சொல்லுங்க விஜய் அண்ணா ரத்தமே என பதிலடி கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த மற்ற விஜய் ரசிகர்கள் கெட்ட வார்த்தையில் பேசிய சக ரசிகரை திட்டி வருகின்றனர்.