தளபதி 68 படம் குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கும் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி விடுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அண்மையில் வெளியான கஸ்டடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக விஜயின் தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனை உறுதி செய்யும் விதமாக படக்குழு நேற்றைய தினம் அதிகாரபூர்வமான அறிவிப்பை சிறப்பு வீடியோவுடன் அறிவித்திருந்தது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கும் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், 12 வருட கனவு நினைவாகியது, என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் சொன்னது போலவே பட அறிவிப்பிற்கு பின்னர் தான் இந்த போட்டோவை வெளியிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டு பத்து மாதங்களுக்கு முன்பு விஜய்யிடம் கதை கூறும் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகின்றனர்.