எனக்கு வலிமை டிக்கெட் கிடைத்துவிட்டது என செம உற்சாகமாக ட்வீட் போட்டு உள்ளார் இயக்குனர்.

Venkat Prabhu About Valimai FDFS : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் ஊரடங்கு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப் போன நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எனக்கு வலிமை முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் கிடைத்து விட்டது என பெரும் சந்தோஷத்தோடு ட்வீட் போட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களும் இது பற்றி அவர்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/_Nithish_17/status/1495830007318724608?t=oXif-N0MiHqGff6D240aeg&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.