பிக் பாஸ் வீட்டில் சொன்னதை செய்து காட்டியுள்ளார் வருண்.

Varun With Childrens : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சஞ்சீவ் வெளியேற்றப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாக வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வருண் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய போது தனக்கு பிடித்த குருகுலத்தில் உள்ள குழந்தைகள் இந்த ஆடையை வடிவமைத்ததாக கூறினார். நான் ஏற்கனவே பலமுறை அந்த ஆசிரமத்திற்கு சென்று குழந்தைகளோடு குழந்தையாக விளையாடியதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னர் அவர்களை சந்தித்து நன்றி கூற வேண்டும் என சொன்னார். அக்ஷராவும் அந்த குழந்தைகளை நானும் பார்க்க வேண்டும் என கூறினார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சொன்னபடி வருண் அக்ஷராவை அழைத்துக்கொண்டு அந்த ஆசிரமத்திற்கு சென்று உள்ளார். இருவரும் அங்கிருந்த குழந்தைகள் ஓடி விளையாடிய வீடியோவை வருண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.