திருமணக்கோலத்தில் பிக்பாஸ் வருண் மற்றும் அக்ஷரா ரெட்டி உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Varun and Akshara Reddy Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் வருண் மற்றும் அக்ஷரா ரெட்டி. இருவரும் இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

திருமணக் கோலத்தில் பிக்பாஸ் வருண் மற்றும் அக்ஷரா ரெட்டி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூட சந்தேகங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில் தற்போது இருவரும் பிரபல வார இதழ் ஒன்றிற்கு திருமணக்கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.