விஜய் தேவரகொண்டா தம்பிக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிகில் பட நடிகை.

Varsha Bollamma With Anand Devarakonda : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். அவற்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் வர்ஷா பொல்லம்மா.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் வர்ஷா பொல்லம்மா. இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்துக்கு ஜோடியாக மிடில் கிளாஸ் மெலோடிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தை பிரபல OTT நிறுவனம் ரூபாய் 4.5 கோடிக்கு வாங்கியுள்ளது. அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.