Varma Movie

Varma Updates : வர்மா படத்தின் புதிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் யார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்த திரைப்படம் வர்மா.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவான இந்த திரைப்படம் அந்த படத்தை போல இல்லாததால் படக்குழு இதனை டிராப் செய்தது.

இதனையடுத்து தற்போது புதிய படக்குழுவை அறிவித்து வருகிறது. முதலில் ஹீரோயினியாக பெனிதா சந்து கமிட்டாகி இருந்தார்.

இவரை தொடர்ந்து இயக்குநராக அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிஷய்யா தேர்வாகியுள்ளார்.

மேலும் இசையமைப்பாளரும் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் என்பவரையே கமிட் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.