Varma Movie

Varma Director : பாலா இயக்கிய வர்மா படத்தை மீண்டும் இயக்க போவது யார் என்ற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

E4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வர்மா.

இம்மாதம் வெளியாக இருந்த இந்த திரைப்படத்தை பாலா சரியாக இயக்கவில்லை. படம்

கொஞ்சம் கூட அர்ஜூன் ரெட்டியோடு ஒத்து போகவில்லை என கூறி தரிப்பு நிறுவனம் இப்படத்தை கை விட்டது.

மேலும் புதிய இயக்குனர் மற்றும் புதிய டீமுடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் நடத்தி ஜூன் மாதத்தில் படத்தை வெளியிடுவோம் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இதனையடுத்து வர்மா படத்தை மீண்டும் யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே நிலவி வந்தது. தற்போது இது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது காதல் கதைகளை இயக்குவதில் திறமை படைத்த கெளதம் மேனன் இப்படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்போது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.