Varma again problem
Varma again problem

Varma again problem – விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

இந்த படம் பற்றி அதிகம் தகவல் வராததால் இப்படம் டிராப்பாகி விட்டதாக ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதில் ஆதித்ய வர்மா திரைப்படம் டிராப்பாகவில்லை என்றும் இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படப்பிடிப்புக்காக படக்குழு வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி போர்ச்சுகல் செல்லவிருப்பதாகவும் ஜூலைக்குள் படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சி செய்வதாகவும் படக்குழு கூறியுள்ளனர்.