மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ள வாரிசு ட்ரெய்லர் அப்டேட் வைரல்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

அதன் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த வாரிசு படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லரை பார்வையிட்ட பார்வையாளர்கள் குறித்த விவரத்தை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ட்ரெய்லர் இதுவரை 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.