பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வாரிசு & துணிவு திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் மற்றும் விஜய் அவர்களின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் தல தளபதி திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பல திரையரங்குகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும் ரசிகர்களின் இடையே சண்டைகள் ஏற்பட்டு பேனர்களை கிழித்து கலவரம் நிலவியது. இதனால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான கூடுதல் காட்சிகளுக்கு அரசு தடை விதித்திருந்தது.

ஆனால் தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு வரும் 12, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தல-தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.