பிரபாஸின் ‘ஆதிபுரூஷ்’ என்ற படத்திற்காக விஜயின் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்படும் தான் நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்க இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகர் ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைந்துள்ளனர்.

தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் வம்சி தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கி வருகிறார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என்ற தகவலை ஏற்கனவே பட குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ‘வாரிசு’ படம் குறிப்பிட்ட தேதியில் தமிழில் மட்டுமே வெளியாகும் என்றும், தெலுங்கில் வெளியாகாது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் எப்படி ஆர்வம் காட்டி வருவார்களோ அதேபோல்தான் தெலுங்கு சினிமாவில் நடிகர் பிரபாஸுக்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவார்கள் என்பதால் அவரது ‘ஆதிபுருஷ்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் வெளியாக உள்ளது. அதனால் விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் ஒரு 4 அல்லது 5 நாட்கள் கழித்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.