வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடி மாஸ் காட்டியுள்ள வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதியாக வலம் வருபவர் விஜய். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல திரை பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

108 மீட்டர் சிக்ஸர் பறக்க விட்ட வாரிசு இசையமைப்பாளர்!!…. சரவெடியான ஆட்டத்தின் ட்விட்டர் வீடியோ வைரல்!.

தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் இசையில் உருவான ரஞ்சிதமே பாடல் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த மகிழ்ச்சியை தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடி அசத்தி இருக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

108 மீட்டர் சிக்ஸர் பறக்க விட்ட வாரிசு இசையமைப்பாளர்!!…. சரவெடியான ஆட்டத்தின் ட்விட்டர் வீடியோ வைரல்!.

அதாவது இசையமைப்பாளர் தமன், 108 மீட்டருக்கு சிக்ஸர் பறக்க விட்டு கிரிக்கெட் விளையாட்டில் அசத்தியிருக்கிறார், உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிய அவர் 21 பந்துகளில் 58 ரன்களை குவித்துள்ளார். மேலும் 199 என்ற கடின இலக்கை தன்னுடைய அணி 16 ஓவர்களில் எட்டி அசத்தியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைப்பதில் மட்டுமின்றி விளையாட்டிலும் அசத்தி வருகிறார் என்று ரசிகர்கள் பாராட்டி அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.