வாரிசு திரைப்படத்திற்கான புதிய அப்டேட்டை தமன் வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக வெளியாக உள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வழங்க உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர், ‘நண்பா, வாரிசு ஆல்பம்’ என்ற ஹாஷ்டேகை பதிவிட்டு இருக்கிறார். அதன்படி விரைவில் வாரிசு திரைப்படத்தின் ஆல்பம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.